கேரளாவுக்கு செல்லும் ரயில் சேவை மாற்றம்!  - Seithipunal
Seithipunal


சென்னை சென்ட்ரல் மைசூரில் இருந்து கேரளா செல்லும் ரயில்களின் சேவை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, கேரளா திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வர்கலா சிவகிரியில் வருடம் தோறும் கொண்டாடப்படுகிறது. 

சிவகிரி தீர்த்த தானம் என்ற பண்டிகையை முன்னிட்டு மைசூர் விரைவு ரயில் பயணிகளின் வசதிக்காக வர்கலா சிவகிரியில் நின்று செல்லும். 

இதில் டிசம்பர் 29, 30 தேதிகளில் மைசூரில் இருந்து கொச்சுவேலி செல்லும் விரைவு ரயில் நின்று செல்லும். அது போல் கொச்சுவேலி இருந்து மைசூர் செல்லும் விரைவு ரயில் ஜனவரி 1ஆம் தேதி வர்கலா சிவகிரி ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். 

திருவனந்தபுரத்திற்கு சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் அதிவிரைவு ரயில் பிற்பகல் 3.20 மணிக்கு புறப்படுகிறது. திருச்சூர் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இந்த ரயில் நாளை பிற்பகல் 3.20 மணிக்கு பதிலாக மாலை 6:45 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala train service Change 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->