ராகுல்காந்தி ஏமாற்றிவிட்டார் - இந்தியா கூட்டணி கட்சியின் முக்கிய புள்ளி குமுறல்!
Kerala Vayanadu Rahulgandhi CPIM
வயநாடு தொகுதி மக்களை ராகுல் காந்தி ஏமாற்றிவிட்டதாக, அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனிராஜா குற்றம் சாட்டி உள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் அபார வெற்றியை பெற்றுள்ள நிலையில், இதில் வயநாடு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இந்த தொகுதியில் வென்று மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி, இரண்டாவது முறையாகவும் தன்னை வெற்றி பெற வைத்த மக்களுக்கு அவர் ராஜினாமா செய்வதன் மூலம் துரோகம் செய்ய உள்ளதாக இப்போதே விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனிராஜா, ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களை ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தேர்தல் வெற்றிக்கு பின்னர் தொகுதியை மாற்ற நினைக்கும் ராகுல் காந்தி, அந்த தொகுதி மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட போவதாக முன்னதாகவே வயநாடு தொகுதி மக்களுக்கு அவர் தெரிவித்திருக்க வேண்டும். அவர் வயநாடு தொகுதி மக்களை ஏமாற்றிவிட்டார்.
அவர் ராஜினாமா செய்த பிறகு வரும் இடைத்தேர்தலில் இடதுசாரிகள் சார்பாக யார் போட்டியிடுவார்கள் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் முடிவு செய்யும் என்று ஆனிராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் கம்னியூஸ்ட் கட்சிகள் பல தொகுதிகளில் நேருக்கு நேர் எதிர்த்து போட்டியிட்டது. இதில் கேரளாவின் அணைத்து தொகுதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kerala Vayanadu Rahulgandhi CPIM