பாதுகாப்பில் 100 போலீஸ்! 9 மணிக்கே பாரை திறந்து மது விற்பனை! சுத்துப்போட்ட பாஜகவினர்!  - Seithipunal
Seithipunal


மதுரை பேரணிக்காக பழனியில் இருந்து புறப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த பாஜகவை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை கைது செய்த போலீசார், தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், அந்த மண்டபத்தில் பக்கத்துக்கு கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தனியார் மதுபான பார் காலை 9 மணிக்கே திறக்கப்பட்டு மது விற்பனை செய்து வருவதை வீடியோ எடுத்து பாஜகவினர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், "கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை மாதவரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதே மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் விற்பனை கும்பலிடமிருந்து  இருந்து 4 கிலோ போதைப் பொருளோடு 5 நாட்டுத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

இப்படியாக, தமிழகத்தில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கொடியவகை போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் ஏராளமான இளைஞர்களும் தங்களின் எதிர்காலத்தையும் தொலைத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. 

தமிழகத்தில் நாள்தோறும்  அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணமான சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொள்வதாக 
விளம்பரத்தில் மட்டும் கோருவது எந்த வகையில் நியாயம் ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுவிற்பனையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதோடு, போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி பின்னணியில் இருப்பவர்களையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Protest Tasmac BAR AMMK TTV Annamalai DMK MKStalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->