மகளிர் நடத்துனர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் பணி நிரந்தரம்.. பிஆர்டிசி மேலாண் இயக்குனர் உறுதி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 12 வருடங்களுக்கும் மேலாக தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரியும் மகளிர் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பிஆர்டிசி மேலாண் இயக்குநருடன் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேச்சுவார்த்தை நடத்தினார். 

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 12 வருடங்களுக்கும் மேலாக தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரியும் மகளிர் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.அதற்காக பல்வேறு கட்ட போராடங்களையும் நடத்திவருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சட்டமன்ற  எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் தலைமையில் பிஆர்டிசி கூட்டுப் போராட்டக் குழுவினர் சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சிவக்குமார் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினர். 

அப்போது, புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் 12 வருடங்களுக்கும் மேலாக தினக்கூலி தொழிலாளர்களாக பணிபுரியும் மகளிர் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.தினக்கூலியாக பணியாற்றும் மகளிர் நடத்துனர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மேலாண் இயக்குநர் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் பணி நிரந்தரம்  செய்வதாக உறுதியளித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, பிஆர்டிசி கூட்டுப் போராட்டக்குழு தலைவர் ராஜேந்திரன், செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் திருக்குமரன், தொமுச நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராஜசேகர் மற்றும் மகளிர் நடத்துனர்கள் பங்கேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women conductors to be made permanent within a monthPRTC Managing Director Confirmed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->