4 வயது பிஞ்சு குழந்தையின் காலை அடுப்பில் வைத்து, காதலனுடன் சேர்ந்து தாய் செய்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தனது காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனின் காலை அடுப்பில் வைத்து காயம் ஏற்படுத்திய கொடூர தாயால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் அட்டப்பாடி என்ற மலை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இரு மகன்கள் இருந்த நிலையில், மூத்த மகன் தந்தையுடனும் இளைய மகன் தாயுடனும் வசித்து வந்துள்ளனர்.

இத்தகைய சூழலில், ரஞ்சிதாவுக்கு உன்னிகிருஷ்ணன் என்ற நபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தங்களது காதலுக்கு சிறுவன் இடையூறாக இருப்பதாக கருதியுள்ளனர். இந்த நிலையில் நான்கு வயது மகனின் காலை கேஸ் ஸ்டவ்வில் வைத்து ரஞ்சிதா மற்றும் உன்னிகிருஷ்ணன் இருவரும் சேர்ந்து சூடு படுத்தியதாக தந்தை சுப்பிரமணியன் போலீசில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சொல்பேச்சை கேட்காததால் மகனுக்கு சூடு வைத்தேன் என்று ரஞ்சிதா கூறியுள்ளார். ஆனால், போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மது அருந்திவிட்டு உன்னிகிருஷ்ணன் சிறுவனை தாக்கியது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  ரஞ்சிதா மற்றும் அவரது காதலன் உன்னிகிருஷ்ணன் இருவரையும் போலீசார் சிறையில் அடைத்து விட்டு நான்கு வயது குழந்தையை தந்தையுடன் அனுப்பி வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Women and her Boy friend torched 4 years son in attapadi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->