கடத்தப்பட்ட 6 வயது சிறுமி பத்திரமாக மீட்பு! தீவிர விசாரணையில் கேரள போலீசார்! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் நேற்று மாலை கடத்தப்பட்ட 6 வயது சிறுமியை போலீசார் இன்று பத்திரமாக மீட்டுள்ளனர். 

கேரளா, ஓயூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஹல் சாரா ரிஷி (வயது 6). இவர் நேற்று மாலை டியூஷன் முடித்துவிட்டு சகோதரனுடன் வீடு திரும்பி கொண்டிருந்தபோது இவர்களை பின்தொடர்ந்து சென்ற கும்பல் சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றது. 

பின்னர் கடத்தல் கும்பல் சிறுமியின் தாய்க்கு தொலைபேசி மூலம் அழைத்து மகளை கடத்தி விட்டதாகவும் சிறுமையை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. 

மீண்டும் நேற்று இரவு 10 மணிக்கு அழைத்து ரூ. 10 லட்சம் தருமாறு தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் சிறுமியை போலீசார் கொல்லத்தில் உள்ள ஆசிரமத்தின் மைதானத்தில் பத்திரமாக மீட்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து சிறுமியை முதலுதவிக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியிடம் கடத்திய நபர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kidnapped girl safely rescued Kerala police investigation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->