ஜம்முவில் அதிர்ச்சி.! பெண்ணை கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி... வெவ்வேறு இடங்களில் புதைத்த நபர்..!! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெண்ணைக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோய்புக் பகுதியை சேர்ந்தவர் தன்வீர் அகமத் கான். இவர் சோய்புக் காவல் நிலையத்தில் பயிற்சி வகுப்பிற்கு சென்ற தனது 30 வயது சகோதரியை காணவில்லை என்று புகார் கொடுத்தார். இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், காணாமல்போன பெண் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருந்தனர்.

இதில் மொகந்த்பொரா புட்காம் பகுதியை சேர்ந்த ஷபீர் அகமது வானி(45) உட்பட சிலரிடம் போலீசார் கிடக்கு பிடி விசாரணை நடத்தியதில், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட பெண்ணை ஷபீர் அகமது வானி கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணையில், தனது உறவினரை அந்தப் பெண் திருமணம் செய்ய மறுத்ததால், பெண்ணை கொலை செய்து அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வெவ்வேறு இடங்களில் புதைத்ததாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Killing woman chopping body into several pieces in Jammu Kashmir


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->