கொச்சி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உயிரிழந்த 4 மாணவா்கள்! நடந்தது என்ன?
Kochi University program4 students died
கேரளா, கொச்சி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற கலை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவை முன்னிட்டு பிரபல பாடகரின் இசை நிகழ்ச்சிக்கு நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது திடீரென மழை பெய்ததால் மாணவர்கள் மேடையை நோக்கி ஓடத் தொடங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி 2 மாணவிகள், 2 மாணவர்கள் என மொத்தம் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4 மாணவர்களின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்திற்கு மாநில முதல்வர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்த மாணவர்கள் குறித்து கோழிக்கோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது.
வட மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அனைத்து கலை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாநில அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Kochi University program4 students died