ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்க்க முடியாது! உயர்நீதிமன்றம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கரை நீக்க உத்தரவிட கோரி தாக்கல் செய்யபட்ட மனுவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் ராமா பிரசாத் சர்கார் என்பவர், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில்,

மேற்கு வங்கத்தில் ஜக்தீப் தன்கர் ஆளுநராக பதவியேற்றது முதலே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரினாமுல் காங்கிரஸ் அரசை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து வருவதாகவும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை, முதல்வர் என்று கூட பார்க்காமல் பகிரங்கமாக விமர்சித்து, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். 

ஜக்தீப் தன்கர் ஆளுநராக செயல்படாமல், பா.ஜ.,வின் குரலாக செயல்பட்டு வருகிறார் என்றும், ஆளுநர் என்ற நிலையில் நடுநிலையாக செயல்படாமல், மிகவும் பாரபட்சமாக செயல்படுவதால், அவரை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, நீதிபதி பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, எந்த நீதிமன்றமும், ஆளுநரை எதிர் மனுதாரராக சேர்த்து பதில் அளிக்க உத்தரவிட முடியாது என்று கூறி, வழக்கறிஞர் ராமா பிரசாத் சர்கார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kolkata High court Governor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->