இவன் தான் குற்றவாளி! கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 

25 இடங்களில் காயம், கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சு திணறி பலியானதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்த நிலையில், காவல்துறையில் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்திவந்தனர்.

மேலும், மேற்கு வங்க மாநில சீல்டா மாவட்ட நீதிமன்றத்தின் இந்த வழக்கு கடந்த 57 நாட்கள் நடந்துவந்தது. 50 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  சஞ்சய் ராய் தான் குற்றவாளி என்றும், அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் சிபிஐ கோரிக்கை வைத்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சஞ்சய் ராய் தான் குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மரணதண்டனை உறுதியாக வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kolkatta Doctor Hacked to death case judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->