கும்பாபிஷேக விழாவுக்கு ராமர் வர மாட்டார்.!! பரபரப்பை கிளப்பிய முக்கிய புள்ளி!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் இருந்து 6000 மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்ளும் இந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் விஷ்வந்து பரிஷத் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

இந்த நிலையில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவியின் மகனும் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். வரும் ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கு வர வேண்டும் என்பது கட்டாயமா? 

கும்பாபிஷேக விழாவை புறக்கணித்த 4 சங்கராச்சாரியார்களின் கனவில் ராமர் வந்துள்ளார். அதேபோன்று என் கனவிலும் ராமர் வந்தார். கும்பாபிஷேக விழாவிற்கு நான் வரமாட்டேன் என என்னிடம் கூறியுள்ளார்" பேசி இருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lalu son said God Ram not coming temple ceremony


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->