கடந்த ஆண்டு 4.29 லட்சம் அமெரிக்கர்கள் இந்தியா வருகை.! உள்துறை அமைச்சகம் தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு வருடமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் இருந்தது. அதன் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் சுமார் 15.24 லட்சம் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு வந்தவர்களில், 74.39 சதவீதம் பேர் பத்து நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதிலும் குறிப்பாக, இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டினரில் அமெரிக்கர்கள் தான் அதிகம் வந்துள்ளனர். அதன் படி, கடந்த ஆண்டு 4.29 லட்சம் அமெரிக்கர்கள் இந்தியா வந்துள்ளனர். 

அமெரிக்காவைத் தொடர்ந்து, 2.40 லட்சம் வங்காளதேசத்தவர்கள், 1.64 லட்சம் பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், கனடாவைச்ச சேர்ந்த 80,437 பேர் மற்றும் நேபாள நாட்டினர் 52,544 பேரும் இந்தியாவிற்கு வந்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாட்டினரும் அதிக அளவில் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

last year four lakhs american peoples come to india


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->