குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை - எத்தனை நாள் தெரியுமா?
summar holiday to family welfare courts in tamilnadu
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதன் காரணமாக அரசு அலுவலகங்களின் செயல்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகம் மற்றும் புதுவையில் பள்ளிகளுக்கு தேர்வுகளை நடத்தி முடித்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு, வரும் மே 1-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு 15 நாட்கள் விடுமுறை என்று சென்னை உயர்நீதிமன்றம் தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
அதாவது சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
summar holiday to family welfare courts in tamilnadu