அந்த மனசு தான் சார் கடவுள்...! தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையனுக்கு பேசுவதற்கு வாய்ப்பளித்தார்...!
Edappadi Palaniswami gave Sengottaiyan chance to speak Tamil Nadu Assembly
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது.

இதையொட்டி அ.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு அறுசுவை விருந்து வைத்தார்.
மேலும், இந்த விருந்தில் தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்.பி.க்களும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இதில் வியக்கத்தக்கவிதமாக செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் இன்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,நேற்று விருந்தை புறக்கணித்த செங்கோட்டையனுக்கு சட்டசபையில் பேச வாய்ப்பளித்தார்.
இதில், பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் செங்கோட்டையன் உரையாடினார்.மேலும்,பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் என்ற முறையில் செங்கோட்டையன் பேச எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு அளித்தார்.
இது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
English Summary
Edappadi Palaniswami gave Sengottaiyan chance to speak Tamil Nadu Assembly