சபரிமலையின் பெருவழி பாதையில் மின்விளக்கு வசதி..!! சபரிமலை தேவஸ்தானம் ஏற்பாடு..!! - Seithipunal
Seithipunal


சபரிமலை ஐயப்பன் கோவிலின் மண்டல கால பூஜை தொடங்கி 32 நாட்கள் கடந்த நிலையில் நேற்று நான்காம் கட்ட போலீஸ் குழுவினர் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இந்தக் குழுவில் ஒரு எஸ்.பி, ஒரு கூடுதல் எஸ்.பி, 9 டி.எஸ்.பி, 33 ஆய்வாளர்கள், 93 உதவி ஆய்வாளர்கள், 1200 காவலர்கள் என 1335 பேர் உள்ளனர். சபரிமலையின் மண்டல கால பூஜை நெருங்க உள்ள நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறையினர் அனைவரும் சபரிமலையை சுத்தமாக பராமரிக்க தினமும் புண்ணியம் பூங்காவனம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என எஸ்பி ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். சபரிமலைக்குச் செல்லும் பெருவழி பாதையான வலியானவட்டம், சிறியானவட்டம் ஆகிய இடங்களில் முதன்முறையாக மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பாதைகளில் சுமார் நான்காயிரம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை எல்.இ.டி விளக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் மூன்று எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதியுடன் கூடிய சார்ஜ் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி இலவுங்கல்லில் சபரிமலை ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Light facility and vehicle charging centers arranged in sabarimala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->