பீகாரில் இடி மின்னல் தாக்கி 11 பேர் பலி.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பீகாரில் மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நிவாரணம் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 11 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும், மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lightning strike in bhihar 11 people death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->