மன்மோகன் சிங் போல் நேரு குடும்பத்தால் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்படுவார்! - பாஜக
Like Manmohan Singh Congress new president will be remote controlled by Nehru family
புதிய காங்கிரஸ் தலைவர் நேரு குடும்பத்தின் பினாமி - பாஜக விமர்சனம்!
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவிற்கு எதிராக வலுவான கூட்டணி அமையும் வகையில் காங்கிரஸ் தலைவர் இருக்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் ஆகும்.
இன்று காலை கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் போட்டியில் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை எனவே அந்த பதவிக்கு நானே போட்டியிடுவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நேருவின் குடும்பத்திற்கு பினாமியாக இருப்பார். அவர் மன்மோகன் சிங் போன்று ரிமோட் கண்ட்ரோல் செய்யப்படுவார் என்று பாஜக விமர்சனம் செய்துள்ளது.
பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, "முட்டாள் தலைவராக வருவதால் என்ன திறமை இருக்க முடியும்? காங்கிரஸ் எம்எல்ஏக்கள் முடிவு செய்ய வேண்டாமா? நேரு குடும்பத்திடம் ரிமோட் கண்ட்ரோல் இருக்கும் பட்சத்தில் இந்த போலி தேர்தல் எதற்கு?
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பா சிதம்பரம் அடுத்த தலைவர் யார் வந்தாலும் ராகுல் காந்திக்கு கட்சியில் முக்கிய இடம் கிடைக்கும் என சமீபத்தில் குறிப்பிட்டார்.
காங்கிரஸின் அடுத்த தலைவர் நேருக்கு குடும்பத்தின் பினாமியாக இருப்பார் என்பதற்கு இது ஒரு சான்று.
மன்மோகன் சிங் சோனியா காந்தி ரிமோட் மூலம் கட்டுப்படுத்தியது போல் புதிய காங்கிரஸ் தலைவரை கட்டுப்படுத்துவார்கள். விரைவில் நடைபெறவுள்ள வாக்கு பதிவு வெறும் கண்துடைப்புக்காக என்பதை தெளிவாக தெரிகிறது" என்று பூனாவல்லா கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையை சந்திக்க பீகார் அரசியல் கட்சிகள் முயற்சித்து வரும் நிலையில் பாஜகவின் இது போன்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க சாத்தியமாக அமையும்.
காங்கிரஸ் அல்லாத இந்தியா! என்ற முழக்கத்தை பாஜக கையில் எடுத்துது போல், பாஜக அல்லாத இந்தியா! என்ற முழக்கம் காங்கிரஸ் கையால் எடுக்க முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Like Manmohan Singh Congress new president will be remote controlled by Nehru family