நாளை முதல் கார்ப்பரேட் அலுவலகங்களில் மது அருந்த அனுமதி.. எங்கு தெரியுமா.?
Liquor allowed incorporate office Hariyana
ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில் ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவு கோள்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் மது அருந்துவதற்கு தயாராக வைத்திருக்கவும் பயன்படுத்துவதற்கும் சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேர்மறையான வேலை சூழலை உருவாக்கும் விதமாக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
இந்த சலுகையை பெற அலுவலகங்களில் குறைந்தது 5000 ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனைக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகம் ஒரு வளாகத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவை வைத்திருக்க வேண்டும் எனவும் அது சுயமானதாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Liquor allowed incorporate office Hariyana