வெறும் 48 வாக்குகள் வித்தியாசம்! 10 லட்சம் வாக்குகள் வித்தியாசம்! அபார வெற்றியை திரும்பி பார்க்கவைத்த இருவர்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த இந்த மக்களவைப் பொதுத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி ஆகி உள்ளது. 

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் இந்த கூட்டணியும் மத்தியில் ஆட்சியை அமைப்பதற்கு உண்டான பணிகளை முன்னெடுத்துள்ளனர். 

இந்த நிலையில், நேற்று வெளியான தேர்தல் முடிவில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடமேற்கு தொகுதியில் சிவசேனா கட்சி (ஏக் நாத் அணி) வேட்பாளர் ரவீந்திர வாய்கர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

இவரே இந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேலும், அசாம் மாநிலம் துப்ரி தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராகிபுல் ஹுசைன் 10 லட்சத்து 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார். 

இந்த மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை ராகிப்புல் ஹுசைன் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha Election 2024 Result Large And Small Scale Victory


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->