#BREAKING | தேர்தல் வாக்கு எண்ணிக்கை எதிரொலி - ஜூன் 4 மது கடைகள் மூடல்!
Lok Sabha Elections 2024 Pudhucherry Liquare Shop Closed june 4
நாடு முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை ஆறு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதுவரை நடந்த தேர்தலில் அதிகபட்சமாக நான்காம் கட்ட தேர்தலில் 69.16 சதவீத வாக்கு பதிவாகி உள்ளது. ஏழம்பட்ட தேர்தல் 57 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.
ஜூன் நான்காம் தேதி ஏழு ஏழு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
மதியம் 2 மணிக்கு அளவில் கிட்டதட்ட மத்தியில் யார் ஆட்சி அமைக்க போகிறார் என்பது உறுதியாகிவிடும். வெளியான தேர்தல் கருத்துக்கணிப்புகள் அனைத்துமே பாஜகவே மூன்றாவது முறையாக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கின்றன.
அதே சமயத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைமையிலான கூட்டணியும் மத்தியில் ஆட்சி மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் இத்தேர்தலில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழகத்திலும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Lok Sabha Elections 2024 Pudhucherry Liquare Shop Closed june 4