நாளை காலை தேர்தல்! சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல்முறை! அனைத்து காங்கிரஸ் எம்பி-க்களுக்கும் பறந்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


18 ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள்  மக்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

தொடர்ந்து மாநிலங்களின் அகவரிசை அடிப்படையில் மக்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியேற்று கொண்டனர். இன்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மக்களவை உறுப்பினர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

இவர்களுக்கு மக்களவை இடைக்கால தலைவராக பாஜக எம்பி பா்த்ரு ஹரி மகதாப் நியமிக்கப்பட்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில், சுகந்திரம் பெற்ற பிறகு முதல்முறையாக மக்களவைத் தலைவர் பொறுப்புக்கு நாளை தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தலைவர் பொறுப்புக்கு இதுவரை தேர்தல் நடத்தாமல் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் ஒரு மனதாகவே மக்களவைத் தலைவரை தேர்வு செய்து வந்த நிலையில், இந்த முறை காங்கிரஸ்-திமுக இண்டி கூட்டணி துணை சபாநாயகர் பதவி கேட்டதால், தற்போது மக்களவை தலைவரை தேர்ந்தெடுப்பதறகான தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓம் பிர்லாவை மக்களவைத் தலைவராக முன்னிறுத்தியுள்ளது. இண்டி கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைத் தலைவரைத் தேர்வு செய்ய நாளை (ஜூன் 26) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lok Sabha speaker Election 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->