ராஜினாமா செய்கிறாரா பிரதமர் மோடி! பரபரப்பான சூழ்நிலையில் கூடுகிறது மத்திய அமைச்சரவை!
LokSabha Election 2024 NDA BJP PMModi
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் பிழையில், இரவு 8 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பாஜக 240 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் அதன் கூட்டணி கட்சிகள் சுமார் 50 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 99 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் சுமார் 134 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
இந்த தேர்தலை பொருத்தவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.
அதே சமயத்தில் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தல் கட்சிகளை தங்களது கூட்டணிக்கு இணைத்து, மத்தியில் ஆட்சி பிடிப்பதற்கு உண்டான பணிகளை காங்கிரஸ் கட்சியும் மும்பரமாக முன்னெடுத்துள்ளது.
இந்த நிலையில், நாளை காலை 11:00 மணியில் அளவில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் வெற்றி - தோல்வி நிலவரங்கள் குறித்தும், அடுத்து மீண்டும் ஆட்சி அமைப்பது குறித்தும், ஆட்சி அமைப்பதற்காக கூட்டணி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு முன்பாக பாஜக கூட்டணி 400 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பெருத் நம்பிக்கையுடன் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், தற்போது ஆட்சி அமைப்பதற்கு உண்டான பெரும்பான்மையே இல்லாமல் பாஜக தவிர்த்துக் கொண்டிருக்கிறது. மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பி பாஜக காத்து கொண்டு இருக்கிறது.
பெரும்பான்மை கிடைக்காத பாஜகவிற்கு இது தோல்விதான் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன.
மேலும், பிரதமர் மோடியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அவர் தோல்வியை ஏற்றுக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்கள் தந்த இந்த தேர்தல் முடிவை வெற்றியாகவே கருதி தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
English Summary
LokSabha Election 2024 NDA BJP PMModi