#BigBreaking | பட்டையை கிளப்பும் பாஜக! இண்டி கூட்டணி பெரும் பின்னடைவு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு உடனுக்குடன் முன்னணி நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் 543 தொகுதிக்கான முன்னிலை நிலவரப்படி பாஜக 287 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 224 இடங்களிலும், மற்ற கட்சிகள் 32 இடங்களிலும் முன்னிலை வகுத்து வருகின்றன.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியான முன்னிலை நிலவரப்படி, மொத்தம் 543 தொகுதிகளில் 516 தொகுதிகளுக்கு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதில் பாஜக 223 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியின்றி பாஜக வேட்பாளர் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளார். 

தேசிய காங்கிரஸ் கட்சி 96 இடங்களிலும், சமாஜ்வாதி பாட்டி 34 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களிலும், திமுக 16 இடங்களிலும், தெலுங்கு தேசம் 15 இடங்களிலும், ஜனதா தல் 12 இடங்களிலும், ஆம் ஆத்மி 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.


தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்த வரை மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி 36 தொகுதிகளிலும், அதிமுக இரண்டு தொகுதிகளிலும், பாஜக-பாமக கூட்டணி தலா ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள தகவலின் படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் இரண்டு தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி ஒரு தொகுதியிலும், அதிமுக ஒரு தொகுதியிலும் முன்னிலை முன்னிலை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LokSabha Election 2024 Vote counting leading 10 30 am


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->