சம்மர் வெப்பம்.. காரில் சாணியை வைத்து.. மருத்துவரின் வினோத செயல்.!
Madhya Pradesh doctor strange attempt to escape the scorching summer heat
சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மக்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான முயற்சிகளையும் செயல்களையும் கையாண்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சார்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் கோடை வெயிலிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள செய்திருக்கும் புதிய முயற்சி அனைவரையும் ஆச்சரியமடைய செய்திருக்கிறது.
இந்த வருடம் கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இன்னும் நான்கு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் வட மாநிலங்களில் அனல் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது போன்றவற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இந்த கொடுமையான வெயில் காலங்களில் பயணங்களின் போது தன்னை தற்காத்துக் கொள்ள மத்திய பிரதேசத்தைச் சார்ந்த ஹோமியோபதி மருத்துவரான சுஷில் சாகர் தன்னுடைய கார் இருக்கு மாட்டுச்சாணம் பூசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். இது தொடர்பாக பத்திரிகைகளின் கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறார் சுஷில்.
இது குறித்து பேசியிருக்கும் அவர் கார் முழுவதுமாக மாட்டு சாணத்தை பூசியிருப்பதால் சூரிய வெப்பத்திலிருந்து தன்னையும் தன்னுடைய வாகனத்தையும் காப்பாற்றிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார். மேலும் மாட்டுச் சாணத்தில் இருக்கக்கூடிய குளிர்விக்கும் தன்மை சூரியனின் தாக்கம் நேரடியாக காரை தாக்காமல் இருப்பதற்கு உதவியாக இருப்பதாகவும் கூறினார். இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் மழை மற்றும் வெயில் ஆகியவற்றிலிருந்து நமது காரை நன்றாக பராமரித்தால் காரில் மாட்டுச்சாணம் பூசிக்கொண்டு வாகனம் இயக்குவதை கோடை காலம் முழுவதும் நம்மால் பயன்படுத்த முடியும் என தெரிவித்திருக்கிறார்.
English Summary
Madhya Pradesh doctor strange attempt to escape the scorching summer heat