ஓடும் ரயிலில் தீ விபத்து.. அலறிய பயணிகள்.. வந்தே பாரத் ரயிலில் முதல் சம்பவம்.!!
Madhya Pradesh Vande Bharat train fire accident
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயிலை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போபாலில் இருந்து டெல்லியை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில் இன்று காலை 7:30 மணி அளவில் ரயில் உள்ள மின்கலனில் ஏற்பட்ட பிரச்சனையால் ஒரே ஒரு பெட்டியில் மட்டும் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீயணைக்கப்பட்டது. மேலும் மற்ற பெட்டிகளுக்கு செல்லும் மின் இணைப்பும் உடனடியாக துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வந்தே பாரத் ரயில் மீண்டும் தீவிர பரிசோதனைக்கு பிறகு இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் முதன்முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தை தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்படும் ரயில் விபத்து சம்பவங்கள் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் உண்டாக்கி உள்ளது.
English Summary
Madhya Pradesh Vande Bharat train fire accident