20 பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்த நியாஸ் ஷேக்! டார்கெட் வைத்து அரங்கேற்றிய மோசடி!
Maharashtra marriage forgery man arrested
மகாராஷ்டிரா மாநிலத்தில் 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நல்லா சோபாரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக 43 வயதான ஃபிரோஸ் நியாஸ் ஷேக் என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் மூலம் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது.
அவரின் அந்த புகாரில், மேட்ரிமோனி இணையதளம் மூலமாக நியாஸ் ஷேக்கை சந்தித்ததாகவும், பின்னர் தன்னை ஏமாற்றி விட்டு அவர் சென்றதாகவும் அந்த பெண் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதி போலீசார் அவரை தானே மாவட்டத்தில் வைத்து கைது செய்தனர். மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு காலகட்டங்களில் பல பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், தலைநகர் டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 20 க்கும் மேற்பட்ட பெண்களை நியாஸ் ஷேக் ஏமாற்றி திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தற்போது புகார் அளித்த பெண்ணை கடந்தாண்டு நவம்பர் மாதம் நியாஸ் ஷேக் திருமணம் செய்து, அந்த பெண்ணிடம் இருந்து பணம் மடிக்கணினி உள்ளிட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஏமாற்றி திருடிவிட்டு தலைமுறையாகியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் நியாஸ் ஷேக் மேட்ரிமோனி தளங்களில் விவாகரத்தான மற்றும் கணவனை இழந்த பெண்களை குறி வைத்து அவர்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக இவனின் நோக்கம் அந்த பெண்களின் நகை மற்றும் பணம் உள்ளிட்டவர்களை திருடிச் செல்வதுதான் வாடிக்கை என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
English Summary
Maharashtra marriage forgery man arrested