கைம்பெண்கள் ஒடுக்குமுறை! மகாராஷ்டிரவில் ஒன்று திரண்ட 7,683  கிராமங்கள்! அதிரடி தீர்மானம்!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவில் 7,000க்கும் மேற்பட்ட கிராமங்கள், விதவைகளை ஒதுக்கும் பழமையான சமூக வழக்குகளை முற்றிலுமாகக் கைவிடுவதாக வரலாற்றுச் சிறப்புடைய முடிவை எடுத்துள்ளன.

நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தில் நிலவியிருந்த இந்த மூடநம்பிக்கைகள், கணவரை இழந்த பெண்களை மன ரீதியாகவும், சமூக ரீதியாகவும் துன்புறுத்தி, அவர்களை தனிமைப்படுத்தியிருப்பது மரபாகவே தொடர்ந்தது. ஆனால், இப்போது அந்த மரபுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

2022ல் கோலாப்பூர் மாவட்டத்தின் ஹெர்வாட் கிராமத்தில் துவங்கிய மாற்றம், கைவிரல்களில் வளையல் உடைத்தல், தாலி அகற்றுதல், கருப்புச் சட்டை அணிய கட்டாயப்படுத்துதல் போன்ற விதவைகளுக்கு எதிரான நடைமுறைகளை எதிர்த்து ஒரு தீர்மானமாக உருவெடுத்தது.

இதனைத் தொடர்ந்து, அக்கிராமத்தில் விதவைகளை திருமண விழாக்களில் பங்கேற்கச் செய்தல், ஹல்தி-குங்குமம் அணிவித்தல் போன்ற மனிதநேய நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த இயக்கம் தற்போது சாங்லி, சதாரா, நாசிக் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு விரிந்து, விதவைகளுக்கு நிறைய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சமூக நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி, மறுமணம் செய்ய உரிமை, சமூக இடுகழிகளிலிருந்து விடுபடுதல் என பரந்தளவில் மாற்றங்கள் கண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Maharastra New Rule for Widow


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->