அடப் பாவமே! சொத்துப் பிரச்சினையால் அக்கா-தங்கை எடுத்த விபரீத முடிவு...! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தென்காசியில் சுரண்டை அருகே சாம்பவர்வடகரை கீழுர் பொய்கை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் மனைவி 62 வயதான சரோஜா. இதில் வைத்தியலிங்கத்தின் உடன் பிறந்த சகோதரர் பரமசிவம்.அவருடைய மனைவி 49 வயதான இந்திரா.

இதில்  சரோஜாவும், இந்திராவும் அக்காள்-தங்கை ஆவர். இவர்கள் ஒரே குடும்பத்தில் அண்ணன்-தம்பியை திருமணம் செய்து கூட்டு குடும்பமாக பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால், இரு குடும்பங்களுக்கு இடையே சொத்து தகராறு ஏற்பட்டதால், இரு குடும்பங்களும் பிரிந்து தனித்தனியே வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன் தினம் அக்காள்-தங்கையான சரோஜாவும், இந்திராவும் தங்களுக்கு சொந்தமான தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் கூட்டு குடும்பமாக இருந்தது, சொத்து பிரச்சினையால் தற்போது பிரிந்து கிடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தங்கள் சாவிலாவது குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்று இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.மேலும் இந்தச் சம்பவத்தன்று இருவரும் தங்கள் வீடுகளிலிருந்து ஒன்றாக வெளியேறி தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

strange decision made by siblings due property dispute


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->