திமுக எதிர்கட்சியாவது வெகு தொலைவில் இல்லை - இபிஎஸ் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் உணவுத்துறை மானியக்கோரிக்கை மீது அமைச்சர சக்கரபாணி பதில் உரையாற்றினார். அப்போது அ.தி.மு.க.வினர் மீண்டும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு... தேர்தல் முடிந்தவுடன் ஒரு பேச்சு... என்று தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. கேஸ் மானியமாக ரூ.100 தருவோம் என்று தேர்தல் வாக்குறுதியை மட்டும் அளித்தனர். ஆனால், இதுவரைக்கும் இந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

சட்டசபையில் மக்கள் பிரச்சனை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் வெளியேறி பின்னர் முதல்வரை பேச வைத்து சிறுமைப்படுத்துகின்றனர். இன்னும் 9 மாதங்கள்தான் உள்ளது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியாக மாறப்போவது வெகு தொலைவில் இல்லை.

சபாநாயகரே மரபை கடைபிடிக்கவில்லை என்றால் நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? சபாநாயகர் சொல்வது எதுவும் உண்மையில்லை. அவர் மரபை மீறுகிறார்.

சட்டசபையில் அ.தி.மு.க.வினர் பேசுவதை திட்டமிட்டு நேரலை செய்ய மறுக்கிறார் சபாநாயகர். சபாநாயகர், அவை முன்னவரின் விளக்கத்தில் திருப்தியில்லை" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

eps speech about dmk in tn assembly


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->