கைநழுவி செல்லும் பெரிய திட்டங்கள்.! கொந்தளிப்பில் இளைஞர்கள்.!  - Seithipunal
Seithipunal


மும்பையில் காங்கிரஸ் பிரதிநிதிகள், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு வர இருந்த தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்திற்கு சென்ற விவகாரம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து கவர்னர் பகத்சிங்கோஷ்யாரியை சந்தித்து மனு கொடுத்தனர். 

அதன்பின்னர், காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே தெரிவித்ததாவது, "இந்த மழையினால், பருத்தி, சோயாபீன்ஸ், துவரம், சோளம் உள்ளிட்ட பயிர்கள் மிகுந்த சேதம் அடைந்துள்ளன.

இந்த பயிர்களை எல்லாம் சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர். இதற்கு முன்பாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் விவசாயிகளின் துயரத்தை போக்க தவறியதால் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் அரசை கலைக்க வேண்டும். 

ஆனால், தற்போதுள்ள நிலவரப்படி பார்த்தால் எட்டு மணி நேரத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். ஆனால் மாநில அரசு இதுவரை மஹாராஷ்டிராவை மழையால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் இதுபோன்ற பெரிய திட்டங்கள் மாநிலத்தை விட்டு கைநழுவி செல்வதால் இளைஞர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர்" என்று நானா படோலே தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharstra congress leader nana patole pettion to governor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->