இவை உண்மைக்கு புறமான விஷயங்கள்... பிரதமரை சாடிய கார்கே.! - Seithipunal
Seithipunal


ஆளும் பா.ஜ.கவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ் அரசியலமைப்புக்கு எதிரானது என எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றசாட்டி உள்ளார். 

மக்களவையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, உரையைத் தொடங்கிய சில நேரத்திலேயே எதிர்க்கட்சி எம்.பிகள் தொடர்ந்து கோஷமிட தொடங்கினர். 

அதன் பின்னர் அவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லிகார்ஜுன கார்கே, 

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தவறான தகவல்களையும் உண்மைக்கு புறமான விஷயங்கள் தெரிவித்து வருகிறார். 

மேலும் அம்பேத்கர் மற்றும் நேருவின் உருவ பொம்மைகளை பா.ஜ.கவினர் எரித்தனர். ஆனால் அம்பேத்கரை நாங்கள் அவமரியாதை செய்தோம் என பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பேசியுள்ளார். 

அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் யார் செயல்படுகின்றனர் என மக்களுக்கு நாம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பொய் பேசுவதும் மக்களை தவறாக வழி நடத்துவதும் உண்மைக்கு எதிராக பேசுவதும் பிரதமர் மோடியின் வழக்கம் என கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna Kharge accused PM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->