இது குறித்து மட்டும் ஏன் பிரதமா் மோடி ''மெளனம்'' - விளாசிய கார்கே.! - Seithipunal
Seithipunal


இந்திய நில பகுதியை சீனா ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் சாலைகளை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்து பிரதமர் மௌனம் சாதித்து வருகிறார் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் நடைபெற்ற வரும் நிலையில் ஹிமாச்சலப் பிரதேசம், ரோரு பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கார்க்கை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், 

நாட்டு மக்கள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை காங்கிரஸ் காக்க போராடிக் கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தை காக்காவிட்டால் ஜனநாயகமும் மக்களின் உரிமையும் காணாமல் போய்விடும். பிரதமர் பணக்காரர்களை மட்டுமே ஆதரிக்கிறார். 

ஆனால் காங்கிரஸ் ஏழைகளின் பக்கம் நிற்கிறது. காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட நாட்டின் பொது சொத்துக்களை அதானி, அம்பானி இடம் மோடி அரசு விற்று விட்டது. ஆனால் 55 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு அவர் கணக்கு கேட்கிறார். 

பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டு வங்கதேசத்திற்கு சுதந்திரம் பெற்று தந்தது. காங்கிரஸ் இன்று இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்து சீனா வீடுகள் மற்றும் சாலைகளை அமைத்து கட்டமைத்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து மௌனம் சாதித்து வருகிறார். 

தேர்தல் பிரச்சாரத்தில் இந்து ,முஸ்லிம் மற்றும் ஜாதி ரீதியில் பொதுமக்களை பிளவு படுத்துவதற்காக பிரதமர் மோடி பேசுகிறார். அவரது பேச்சுகளில் விரக்தி வெளிப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதி. 

அதன் பிறகு 30 லட்சம் அரசு பணி காலியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். ஒரு ஐந்தாயிரம் கோடியில் நிறுவனங்கள் உருவாக்கப்படும். வினாத்தாள் கசிவு விவகாரத்தை தடுக்க புதிய கொள்கை வகுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna Kharge criticized PM Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->