இவர்களுக்கு 100 இடங்களில் கூட வெற்றி கிடைக்காது - பரபரப்பு கிளப்பிய மல்லிகார்ஜுன கார்கே! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம், அமேதி தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், பிரதமர் மோடியும் பா.ஜ.க தலைவர்களும் வருகின்ற தேர்தலில் 400 தொகுதிகளில் பெற போவதாக தெரிவிக்கின்றனர். நிச்சயம் அது நடக்காது. 

அவர்கள் நாட்டு மக்களை ஏமாற்றிய திசை திருப்புகிறார்கள். அமேதியும் ரேபரேலியும் காங்கிரஸின் கோட்டையாக உள்ளதால் இங்கு பாரதிய ஜனதா விஷ விதைகளை தூவுகிறது. இதன் மூலம் காங்கிரஸ் தொண்டர்களை திசை திருப்ப முயற்சி நடக்கிறது. 

பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியை சந்திக்கும். 100 இடங்களில் கூட பாரதிய ஜனதா வெற்றி பெறாது. மக்கள் அவர்களை தூக்கி வீச போகிறார்கள். 

காங்கிரசுடன் நாட்டு மக்கள் மிகுந்த பிணைப்புடன் உள்ளனர். இதனை யாராலும் மாற்ற முடியாது. பிரதமர் மோடி காங்கிரஸ் திட்டங்களை நிறுத்திவிட்டார். அதற்கு வாக்காளர்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna kharge speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->