"தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை... கவலையாக உள்ளது" - மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு கடிதம்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது. இருக்கட்டங்களிலும் 190 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. 

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்திய கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை கவலையை அளிக்கிறது. வாக்குப்பதிவு புள்ளி விவரங்கள் அளிப்பதில் காலதாமதம் மற்றும் முரண்பாடு ஏற்படுவதால் தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான தன்மை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளது. 

இது சாதாரண தேர்தல் அல்ல. நமது ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பை நிலை நிறுத்துவதற்கான போராட்டம். தேர்தல் ஆணையம் பொறுப்புடன் இருக்க குரல் எழுப்புவது நமது கடமை என குறிப்பிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mallikarjuna Kharge written letter issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->