தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு மதிப்பு இல்லை - மம்தா பானர்ஜி பரபரப்புக் குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதில் பா.ஜ.க ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன் படி மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசை விட பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்திருந்தன. இதனை மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை கடந்த 2016, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் நாங்கள் பார்த்தோம். எந்த கணிப்பும் இதுவரை சரியாக இருக்கவில்லை. இந்த கருத்துக்கணிப்புகள் ஊடகங்களுக்காக சிலரால் 2½ மாதங்களுக்கு முன்னரே வீட்டில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. இவை கள நிலவரத்தை பிரதிபலிக்கவில்லை.

தேர்தல் களத்தில் பிளவுபடுத்துவதற்கு பா.ஜ.க. முயற்சித்த விதம் மற்றும் முஸ்லிம்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்கிறார்கள் என்று தவறான தகவலை பரப்பியது போன்றவற்றால் பா.ஜ.க.வுக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், காங்கிரசும் பா.ஜ.க.வின் வெற்றிக்கு உதவியிருக்கும் என நினைக்கிறேன். இந்தியா கூட்டணிக்கான வாய்ப்பை பொறுத்தவரை, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலையிடாதவரை அந்த அரசில் பங்கேற்பதற்கு எந்த தடையும் இருக்காது. எங்களை அழைத்தால் செல்வோம். ஆனால் முதலில் தேர்தல் முடிவுகள் வரட்டும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamtha banarji speech about Election polls


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->