2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பொதுமக்களை ஏமாற்றும் செயல் - மே.வ முதல்வர் மம்தா பானர்ஜி.!
Mamtha Bannerjee speech about return of 2000 rupees notes
கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 1000 ரூபாய் நோட்டிற்கு பதிலாக பிங்க் நிறத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்தது.
இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த சில நாட்களிலேயே அதிகளவிற்கு அச்சடிக்கப்பட்டதால் கடந்த 2019 ஆம் ஆண்டு அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம் என்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளை மாற்ற மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 10 நோட்டுகள் வீதம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே 2000 நோட்டுகளை கொடுத்து பிற நோட்டுகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெரும் முடிவை அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர்,2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறுவது என்பது சலுகை அல்ல. இது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றம் செயல் கீழே விழித்துக் கொள்ளுங்கள் பண மதிப்பிழப்பின் போது நாம் எதிர் கொண்ட கஷ்டங்கள் மறக்க முடியாதவை அந்த கஷ்டத்திற்கு காரணமானவர்களை மன்னிக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Mamtha Bannerjee speech about return of 2000 rupees notes