ரூ. 5. கோடி போதைப்பொருள் பறிமுதல் - அசாமில் ஒருவர் கைது.!
man arrested for drugs seized in assam
அசாம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீபூமி மாவட்ட போலீசாருக்கு போதைப்பொருள் குறித்து ரகசிய தகவல கிடைந்தது. அதன் படி போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சென்றுகொண்டிருப்பதை பார்த்தனர்.
அவரை பிடித்த போலீசார் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் போதைப்பொருள் வியாபாரி என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் அவரிடம் மொத்தம் 17,000 யாபா மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது.

அதனை பறிமுதல் செய்த போலீசார் போதைப்பொருள் வியாபாரியை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு ரூ. 5.1 கோடி ஆகும். இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for drugs seized in assam