சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி ஆபாச புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள பள்ளித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் எபின்பால். துபாய் நாட்டில் பணிபுரியும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது, எபின்பாலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பதினேழு வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து எபின்பால், அந்த சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். நாளடைவில், இருவருக்குள்ளும் நெருக்கம் அதிமாகியதால், இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய எபின்பால், அந்தச் சிறுமியிடமே அவரது ஆபாச புகைப்படங்களை எடுத்து அனுப்புமாறுத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த சிறுமியும் புகைப்படத்தை எடுத்து அனுப்பி உள்ளார். இதனை எவின்பால் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இதையறிந்த சிறுமி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து எவின்பாலை தேடி வந்தனர். இந்த நிலையில், எவின் பால் மீண்டும் துபாய்க்குச் சென்றுவிட்டு, நேற்று ஊருக்கு வந்துள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் எவின் பால் வீட்டுக்குச் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். பின்னர் எவின்பாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for obscene photos published on social media in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->