சிறுமியை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்த மருத்துவமனை ஊழியர் - போலீசார் அதிரடி..!
Man arrested for take obscene vedio in karnataga
கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஸ்தபா. இவர் அதேபகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி ஒருவர் தனது தந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
அப்போது, சிறுமிக்கும், முஸ்தபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதற்கிடையே முஸ்தபா, அந்த சிறுமியை நிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்து கொண்டார்.
பின்னர், முஸ்தபா அந்த வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி உள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி சம்பவம் குறித்து பெற்றோர் உதவியுடன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், முஸ்தபாவை போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Man arrested for take obscene vedio in karnataga