டெல்லி : மதுபானக் கடையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி; 2 பேர் கவலைக்கிடம்.!!
man died and two peoples injured for gun shoot liquar shop in delhi
டெல்லி : மதுபானக் கடையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி; 2 பேர் கவலைக்கிடம்.!!
நாட்டின் தலைநகரான டெல்லி அருகே உள்ள குருகிராம் பாஞ்ச்கோன் பகுதியில் மதுபானக் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த மதுபானக் கடையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் விறுவிறுப்பாக மது விற்பனை நடந்துகொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த இரண்டு மர்மநபர்கள், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்துத் தப்பித்துச் சென்றனர். இதில், மதுபானம் வாங்க வந்திருந்த 3 பேர் காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும், மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதக்கவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மதுபானக் கடையின் உரிமையாளர் குல்தீப் சிங் தெரிவித்ததாவது:- "தனக்கு சில நாட்களுக்கு முன் ஒரு வெளிநாட்டு எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், மதுபானக்கடையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மிரட்டினார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்பும் தனக்கு அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. துப்பாக்கிச் சூட்டுக்கு தான்தான் காரணம் என்றும் கடையை கொடுக்காததால் தான் இது நடந்தது என்றும் அவர் தெரிவித்தாக மதுபானக் கடை உரிமையாளர் கூறினார்.
இதையடுத்து போலீசார் மதுபானக் கடைக்காரரின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man died and two peoples injured for gun shoot liquar shop in delhi