தமிழர்களின் உலக அடையாளமாக திருவள்ளுவர் திகழ்கிறார்; முதலமைச்சர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு புதுவருட வாழ்த்து..!
Chief Minister Stalin wishes his workers a Happy New Year
உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும் என திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதனை எழுதியுள்ளார். திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் தமிழர்களின் உலக அடையாளமாக திகழ்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளுவர் சிலை, ஆழிப்பேரலையை எதிர்கொண்டு உயர்ந்து நிற்பதுபோல தமிழ்நாடு தடைகளைத் தகர்த்து முன்னேறும். திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வள்ளுவர் நமக்கு வெறும் அடையாளம் அல்ல, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமூக நீதித் தத்துவத்தை வழங்கிய பேராசான்.
குமரியில் காலத்தால் அழியாத காவியமாக நிலைப்பெற்றுவிட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது என்பதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
பேரறிவு சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டி விழா எடுத்து மகிழ்கிறது திராவிட மாடல் அரசு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பேரறிவுச் சிலையின் வெள்ளி விழா கன்னியாகுமரியில் டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது.
வெள்ளி விழாவின் அடையாளமாக வள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்படுவுள்ளது. தமிழின் சிறப்பை உலகம் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று முதல்வரின் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chief Minister Stalin wishes his workers a Happy New Year