புருவத்தை திருத்தியதற்காக விவாகரத்துக் கொடுத்த கணவர் - உ.பியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள, கான்பூர் பாட்ஷாஹி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2022-ம் ஆண்டு பிரயக்ராஜே பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த இளம்பெண்ணின் கணவர் சவுதி அரேபியாவில் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதனால் அவர் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். 

இந்த நிலையில், அந்த இளம்பெண் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி கான்பூரில் உள்ள திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்த பெண்ணின் கணவர் சவுதி அரேபியாவில் இருந்து அவருக்கு வீடியோ கால் செய்துள்ளார். அதில் தனது மனைவி புருவத்தைத் திருத்தியிருந்ததைப் பார்த்த அவர், ஏன் புருவத்தைத் திருத்தினாய் என்று கண்டித்துள்ளார். 

அத்துடன் வீடியோ காலை அணைத்து விட்டு தொலைபேசியில் அழைத்து மனைவிக்கு தலாக் கூறியுள்ளார். இதுகுறித்து அந்த இளம்பெண் எடுத்துக் கூறியும் அதை அவரது கணவர் காதில் வாங்காமல் இருந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண், அக்டோபர் 12-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவின் பேரில் போலீஸார் இளம்பெண்ணின் கணவர் மீதுவழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man divorce to wife for eyebrow threading in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->