கஞ்சா இலையை கீரை என கொடுத்த கொடூரன்.. சமைத்து சாப்பிட்ட குடும்பத்தினருக்கு அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் உத்திரபிரதேசம் மாநிலத்தில் மியங்கஞ்ச் கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வரும் கிஷோர் என்ற நபர், தனது அண்டை வீட்டாருக்கு வெந்தயக்கீரை என்று கூறி சில இலைகள் அடங்கிய பாக்கெட்டை வழங்கியுள்ளார். 

இதனைபெற்றுக்கொண்ட குடும்பத்தினரும் சந்தேகம் இன்றி கீரையை வைத்து சமைத்து சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளார். 

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அனைவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யவே, இவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கஞ்சா இலையை சாப்பிட்டதாக கூறியுள்ளனர். 

இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளித்து வரும் நிலையில், காவல் துறையினரின் விசாரணையில் கிஷோர் விளையாட்டுத்தனமாக கஞ்சா இலைகளை கொடுத்து, விபரீதத்தில் முடிந்தது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் தற்போது கிஷோரை கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Man gives kanja like spinach family injuries treatment going on hospital


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->