உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பயோபிக் மோஷன் 'அஜய்- தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி' போஸ்டர் வெளியீடு..!
UP Chief Minister Yogi Adityanath biopic motion AjayThe Untold Story of Yogi poster released
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து 'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி' என்ற தலைப்பில் பயோபிக் படமொன்று உருவாகிறது. அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
சாந்தனு குப்தாவின் 'அஜய் -தி மாங்க் ஹூ பிகேம் சீப் மினிஸ்டர்' என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகி ஆதித்யநாத் ஆன்மீக குருவாக இருந்து எப்படி முதல்வர் ஆனார் என்பதை காட்சிப்படுத்தி படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து அஜய்- 'தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி' என்ற தலைப்பில் பயோபிக் படமொன்று உருவாகிறது. அந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
சாந்தனு குப்தாவின் 'அஜய் -தி மாங்க் ஹூ பிகேம் சீப் மினிஸ்டர்' என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகி ஆதித்யநாத் ஆன்மீக குருவாக இருந்து எப்படி முதல்வர் ஆனார் என்பதை காட்சிப்படுத்தி படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை சாம்ராட் சினிமாட்டிக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரில் ''அவர் எல்லாவற்றையும் துறந்தார், ஆனால், மக்கள் அவரை தங்களுடையவராக ஆக்கிக் கொண்டனர்"என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 'அஜய்-தி அன்டோல்ட் ஸ்டோரி ஆப் யோகி'மோஷன் படத்தில் யோகி ஆதித்யநாத் வேடத்தில் அனந்த் ஜோஷி நடித்துள்ளார். இவருடன் பரேஷ் ராவல், தினேஷ் லால் யாதவ், அஜய் மெங்கி, பவன் மல்ஹோத்ரா, ராஜேஷ் கட்டார், கரிமா விக்ராந்த் சிங் மற்றும் சர்வார் அஹுஜா ஆகியோர் நடித்துள்ளனர். ரவீந்திர கெளதம் இயக்கத்தில், ரிது மெங்கியின் தயாரிப்பில், விரைவில் திரைக்கு வருகிறது.
சாம்ராட் சினிமாட்டிக்ஸ் நிறுவனம் அவர்களது யூடூப்பில் வெளியிட்ட மோஷன் போஸ்டர் வீடியோவில் பின்னணியில் அனந்த் மற்றும் பரேஷ் ராவலின் குரல் ஒலிக்கிறது.
அதில் பரேஷ் ராவல், 'என்னிடம் என்ன வேண்டும்?' என்று கேட்கிறார். அதற்கு அனந்த், 'வாழ்க்கையின் நோக்கம்' என்கிறார். 'பாதை கடினமானது' என்கிறார் பரேஷ். 'நானும் பிடிவாதக்காரன்' என்று அனந்த் பதிலளிக்கிறார். 'எல்லாவற்றையும் துறக்க வேண்டும்' என்கிறார் பரேஷ். 'எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்.
ஒரே நோக்கம் மக்களின் சேவை' என்கிறார் அனந்த். 'அவர் எதையும் விரும்பவில்லை, ஆனால் எல்லோரும் அவரை விரும்பினார்கள். அவர் சீடனாக வந்தார், ஆனால் மக்கள் அவரை முதல்வராக்கினார்கள்' என்று பரேஷின் குரல் ஒலிக்கிறது. கறுப்பு வேளையில் உருவாக்கி இறுதியில் காவி நிறத்தில் போஸ்டரை ரிவில் செய்துள்ளனர்.
English Summary
UP Chief Minister Yogi Adityanath biopic motion AjayThe Untold Story of Yogi poster released