சமயபுரம் கோவிலில் பூச்சொரிதல் விழா: 10 இடங்களில் மேலும் கூடுதல் பாதுகாப்பு!
Security tightened at 10 places in Samayapuram temple
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 4-வது வார பூச்சொரிதல் விழா வருகிற 30-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தது வழிபடுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல் இங்கு வருடந்தோறும் மாசி மாதம் முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலின் தனிச்சிறப்பு ஆகும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான அம்மனின் பச்சைபட்டினி விரதம் கடந்த 9-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது . இந்த விரத காலம் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி வரை உள்ளது.
அந்தவகையில் அம்மன் பச்சைப் பட்டினி விரதம் இருக்கும் 28 நாட்களும், அம்மனுக்கு சமைத்த உணவுகள் எதுவும் படைக்கப்படுவதில்லை. இளநீர், பானகம், உப்பில் லாத நீர்மோர், துள்ளுமாவு, கரும்பு, பழ வகைகள் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்பட்டு வருகிறது.
மேலும் அம்மன் பட்டினி விரதம் இருக்கும் காலங்களில் அம்மனின் முகம் சோர்வு டன் காணப்படுவதாக கூறப்படுகிறது. இந்த காலத்தில் அம்மனை குளிர்விப்பதற்காக கூடை கூடையாக மலர்களை கொண்டு வந்து பூச்சொரி தல் விழா நடத்துகின்றனர்.அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 4-வது வார பூச்சொரிதல் விழா வருகிற 30-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது.
இதில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் குழு, குழுவாகப் பிரித்து பூக்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், பக்தர்களை ஒழுங்குபடுத்தும் விதத்தி லும், அவர்களின் பாது காப்பு கருதியும், சன்னதி வீதியின் நுழைவு வாயிலில் இருந்து ராஜகோபுரம் வரை 10 இடங்களில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளது.
English Summary
Security tightened at 10 places in Samayapuram temple