திருப்பத்தூர் || மனைவியை மீட்டுத்தரகோரி குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்ட வாலிபர்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் பழத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மதன்குமார் - விஜயசாந்தி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் விஜயசாந்திக்கு பள்ளவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதையறிந்த மதன்குமார் விஜய சந்தியைக் கண்டித்துள்ளார். இருப்பினும், அவர்கள் தங்கள் உறவை கைவிடாமல் தொடர்ந்துள்ளனர்.

இதையடுத்து விஜய சாந்தி, கடந்த 8ம் தேதி பிரபாகரனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மதன்குமார் கடந்த 9ம் தேதி, மனைவியை மீட்டு தரக்கோரி திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீஸார் இந்த புகார் குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், தொடர்ந்து கவலையில் இருந்து வந்த மதன் குமார் போலீஸாரை கண்டித்து உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோருடன், சேர்ந்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், விஜயசாந்தியை மீட்டு தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man tharna with childrens in tirupathur police station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->