மணிப்பூரில் மீண்டும் தொடங்கிய வன்முறை! தீ களத்தில் போராடும் பெண்கள்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று மீண்டும் புதிதாக வன்முறை வெடித்துள்ளது. காரி பகுதியில் இரு முக்கிய சாலைகளை பெண்கள் முற்றுகையிட்டு, டயர்களைக் கொளுத்திபோட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அதனை அறிந்த போலீஸார், ராணுவம், அதிரடிப் படையினர் ஆகியோர் அந்த பகுதிக்கு விரைந்த வந்து, அங்கு தீ வைக்கப்பட்ட டயர்கள் மீது தண்ணீர் ஊற்றி அனைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அப்பகுதியில் கொடி அணிவகுப்பும் நடத்தினர். 

மணிப்பூர் வன்முறையின் பின்னணி: மணிப்பூரில் கடந்த மே 3-ஆம் தேதியில் இருந்து முதல் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த வன்முறையால் அங்கு 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இந்த கலவரத்தின் காரணமாக, மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கியதாக இருந்தது. மணிப்பூர் மக்களில் 53 சதவீதம் மைதேயி மக்களே உள்ளனர். இவர்கள் இம்பால் சமவெளிப் பகுதிகளில் வாழ்கின்றனர். 

நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்துக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூக மக்கள் நடத்திய அமைதி பேரணியில் கடந்த மே 3-ம் தேதி முதல் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த கலவரம் சுமார் 2 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில், இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும்  500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும், சுமார் 65,000 பேர் வீடுகளை இழந்து அகதிகளாகிவும் உள்ளனர். இது குறித்து இது வரை 5,995 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சூழலில் கடந்த மே 4 ஆம் தேதி நடந்த கொடூரமான செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன. குறிப்பாக நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட இளம் பெண்களின் வீடியோ, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண் போன்ற பல வன்முறைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 

இந்நிலையில், இன்று காலை இம்பாலின் காரி பகுதியில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு டயர்களை கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இதில் ஈடுபட்டவர்கள் மைதேயி சமூகத்தினரா அல்லது குகி சமூகத்தினரா என்பது தெரியவரவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur again started violence


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->