மணிப்பூர் கலவரம்.. ஆம்புலன்சில் வைத்து  தாய், மகன் எரித்து கொலை.! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கே 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட மெய்டீஷ் இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர் கொடி தூக்கி வருகின்றனர். இதில் கடந்த 3ம் தேதி மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர்.

அப்போது அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கலவரமாக மாறி உள்ளது. இந்த வன்முறையில் வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாடு தளங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அதன் காரணமாக இராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அங்கே மீண்டும் இயல்பு நிலை திரும்ப ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

 மேலும், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சென்றார் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதனிடையே குகி தீவிரவாதிகள் நேற்று அதிகாலை நடத்திய துப்பாக்கி சூட்டில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ரஞ்சித் யாதவ் கொல்லப்பட்டார் மேலும் அசாம் ரைபிள் துணை ராணுவ படையின் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். 

இந்த நிலையில் மணிப்பூரில் தாய் மகன் உட்பட 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். அந்த வகையில் குண்டடிப்பட்டு காயமடைந்த 8 வயது சிறுவன் மற்றும் அவரது தாயார் மற்றொரு உறவினர் ஆகிய மூன்று பேர் ஆம்புலன்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்மகும்பல் ஆம்புலன்ஸை வழிமறித்து அவர்களை யார் என்று விசாரித்த கும்பல் தீ வைத்து கொளுத்தியது. இதில் மூன்று பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆயிரம் வீரர்கள் அங்கு விரைந்துள்ளனர். மேலும், விமானம் மூலம் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur riots mother and son fired in ambulance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->