குண்டு காயங்களுடன் தப்பிய மாவோயிஸ்டுகள்: அனைத்து மருத்துவமனைக்கும் போலீசார் எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


கேரளா, அய்யன்குளம் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தேர்தல் வேட்டையில் ஈடுபட்ட போது இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. 

இதில் 2 மாவோயிஸ்டுகள் பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனை தொடர்ந்து அதிரடி படை போலீசார் மாவோயிஸ்டுகள் தங்கி இருந்த இடத்தில் சோதனை நடத்திய போது 2 பேர் குண்டு காயங்களுடன் தப்பி சென்றது தெரியவந்தது. 

கேரளாவில் போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சோதனை சாவடி வழியாக தமிழகத்திற்குள் புகுந்து ஏதேனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளதாக தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகம்-கேரளாவில் உள்ள எலையோர சோதனை சாவடிகளில் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகிறது. 

தமிழ்நாடு-கேரளா மாநில எல்லையோரத்தில் உள்ள 14 சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய 90 போலீசார் உள்பட 160 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். 

இது தொடர்பாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்திருப்பதாவது, மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து மாநகர எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்படுகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் கடுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வாய்ப்பு உள்ளதால் அனைத்து மருத்துவ நிறுவனங்களுக்கும் யாராவது குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற வந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maoistses caped bullet injuries police alert


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->