தொடரும் மர்ம மரணங்கள்.. திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய நபர் உயிரிழப்பு.!
Marriage reception dancing person death in satishkar
சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிர்ழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் உள்ள தல்லி ராஜா நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மண மேடையில் மணமக்களுடன் பஞ்சாபி பாடலுக்கு திலீப் என்ற பொறியாளர் உற்சாகமாக நடமாடி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுந்துள்ளார். அதன்பின்னர் உறவினர்கள் ஆம்புலன்ஸில் திலீப்பை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் நடனமாடிய போது உடலுக்கு அதிகமாக ரத்தம் தேவைப்பட்டதாகவும், இதயத்துடிப்பு அதிகரித்ததன் காரணமாக ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Marriage reception dancing person death in satishkar